நடிகர் சிம்பு நடிக்கும் காட் ஆஃப் லவ் திரைப்படத்திற்கு டிராகன் திரைப்படத்திற்கு இசையமைத்த லியோன் ஜேம்ஸ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படம், இந்தாண்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் டிராகன் இத்திரைப்படம், 10 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் மெகா ஹிட்டடித்துள்ளது.