நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா ஆகியோரின் எக்ஸ் தள கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகை நயன்தாரா தனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், இந்த கணக்கில் வெளியாகும் தேவையற்ற பதிவுகளை ரசிகர்கள் தவிர்க்கும் படியும் பதிவிட்ட சிறிது நேரத்தில், நடிகர் சிலம்பரசனின் எக்ஸ் கணக்கும் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், சமீபத்தில் இருவரது எக்ஸ் பக்கத்திலும் கிரிப்டோ கரன்ஸி தொடர்பான பதிவுகள் வந்தபடி இருந்ததால், இருவரின் சமூக வலைதள கணக்கும் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து சிம்பு எந்த விதமான விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.