கிரியா யோகா மூலம் மன நிம்மதியும் பல்வேறு மாற்றங்களும் நிகழ்ந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ஆன்மீக அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ராஞ்சியில் உள்ள பரமஹம்ச யோகானந்தா ஆசிரமத்திற்கு சென்ற அவர், இரண்டு நாட்கள் தங்கியதாகவும், குருவின் அறையில் அமர்ந்து தியானம் செய்யும் பாக்கியம் தமக்கு கிடைத்ததாகவும் தெரிவித்தார்.