டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த தன்னை தொலைபேசியில் அழைத்து பாராட்டியதாக நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், படம் சூப்பர் என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும் என்றும், சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால், சந்தோசத்துக்கு சொல்லவா வேண்டும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அயோத்தி, நந்தன் படம் பார்த்து பாராட்டிய ரஜினி, ஹாட்ரிக் பரவசமாக 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் பார்த்து சூப்பர் சசிகுமார் என அழுத்திச் சொன்னதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.