டிராகன் திரைப்பட இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்துவை, தமது வீட்டிற்கு அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அஸ்வந்த் மாரிமுத்து, தமது கனவு நிறைவேறிய நாள் இன்று என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நீண்ட நாள்களாக நல்ல படங்களை ஆதரித்து பதிவிடுவதுடன், தொடர்புடைய இயக்குநர் மற்றும் நடிகரை நேரில் அழைத்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இதையும் படியுங்கள் : அல்லு அர்ஜுன் - அட்லீ படத்தில் 5 ஹீரோயின்கள்.. கதைக்கு 5 ஹீரோயின்கள் தேவைப்படுவதாக தகவல்