பிரபல நடிகரும், ஆந்திரா விஜயவாடா தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக தனது 83 வயதில் காலமானார். தமிழில், குத்து, ஜோர், ஏய், திருப்பாச்சி, பரமசிவன், சத்யம், கோ, சாமி, காத்தாடி என பல படங்களில் நடித்து, தனது வில்லத்தன நடிப்புக்கு பாராட்டப்பட்ட கோட்டா சீனிவாச ராவ், தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.