மைசூரில் நடைபெற்ற 'சர்தார் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, நடிகர் கார்த்தி விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டை காட்சியை படமாக்கியபோது நடிகர் கார்த்திக்கு காலில் காயம் எற்பட்டதால், படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு உடனடியாக படக்குழு சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது.