நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள "பிளாக்" படம் அக்டோபர் 11ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அறிமுக இயக்குனர் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். திரில்லராக கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.