நடிகர் தனுஷ், தனது 54ஆவது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் புரமோசனுக்காக மும்பை சென்றுள்ளார். இந்தியில் தனுஷ் - ஆனந்த் எல்.ராய் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் வரும் 28ஆம்தேதி வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் ரசிகர்கள் தனுஷ் உடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.