நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணியில் ஜெயிலர் 2 படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகிவரும் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது