நடிகர் ஆர்யாவின் "மிஸ்டர் எக்ஸ்" திரைப்படத்தின் டீசர் இன்று வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் மனு ஆனந்த், இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இந்த திரைப்படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர், கவுதம் கார்த்திக், அனேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.