நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அருண் விஜயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நயனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இந்த திரைப்படத்தில் இருந்து ஆர்.ஜே. பாலாஜி விலகிய நிலையில், இயக்குநர் சுந்தர்.சி படத்தின் கான்செப்டை மாற்றியுள்ளார்.