அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசரும், அதனைத் தொடர்ந்து, பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இன்று மாலை 6.03 மணிக்கு டிரெய்லர் வெளியாகவுள்ளது. இதுதொடர்பான போஸ்டரை நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.