கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஸ்ரீஊதுகுளங்கர பகவதி அம்மன் கோயிலில் நடிகர் அஜித்குமார் குடும்பத்துடன், சாமி தரிசனம் செய்தார். அஜித் பாரம்பரிய உடை அணிந்து தனது மனைவி ஷாலினி மற்றும் தனது மகனுடன் பெருவெம்பா கிராமத்தில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்த காட்சி, சமூக வலை தளங்களில் படு வைரலாகி வருகிறது. ஸ்ரீ ஊதுகுளங்கர பகவதி அம்மன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த போது, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் நடிகர் அஜித். நடிகர் அஜித்திற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தொடர்ந்து சிறப்பு பூஜைகளில், அவர் கலந்து கொண்டுள்ளார். நடிகர் அஜித் வந்திருந்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கோயிலுக்கு வந்து அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.