தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், மீண்டும் கார் ரேஸில் ஈடுபட இருக்கிறார்.2025ல் ஐரோப்பியாவில் நடக்கும் GT4 சாம்பியன்ஷிப்பில் அவர் பங்கேற்க இருக்காரு. இது பத்தின தகவலை formula 1 கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் உறுதி செய்துருக்காரு. இப்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடிச்சிட்டு இருக்காரு.இதில் விடா முயற்சி படம் இந்தாண்டு இறுதியில வெளியாகும்ணு சொல்லப்படுது. குட் பேட் அக்லி படத்தோட படப்பிடிப்பும் விறுவிறுப்பா நடந்துட்டு இருக்கு. அந்தப் படமும் அடுத்த வருசம் ரிலீஸாக இருக்கு.சினிமால நடிச்சாலும் அதைத் தாண்டி அஜித் குமாருக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸில் தான் ஆர்வம் அதிகம். சூட்டிங் இல்லாத நேரத்தில் இதில் ஆர்வமா இறங்கிடுவாரு. 2025ல ஐரோப்பாவில நடக்குற GT4 சாம்பியன்ஷிப்பில் அவர் பங்கேற்க உள்ளதாகக் கூறப்பட்டது. இதற்காக சில அணிகள் உடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே நடிகர் அஜீத் குமார் மீண்டும் கார் ரேஸ் களத்திற்கு வர உள்ளதை முன்னாள் பார்முலா 1 கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் கன்பார்ம் பன்னீருக்காரு.