கார் பிரியரான நடிகர் அஜித் 3.51 கோடி மதிப்புடைய Porsche 911 GT3 RS என்ற புதிய மாடல் சொகுசு காரை வாங்கியுள்ளார்.பைக்கில் பல இடங்களுக்கு சுற்றுலா செல்லும் நடிகர் அஜித், புதிய மாடல் கார்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.அந்த வகையில் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு 9 கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபெராரி காரை அஜித் வாங்கியிருந்தார்.இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு மாடலான Porsche 911 GT3 RS காரை அஜித் வாங்கியுள்ளார்.அந்த காருடன் அஜித் இருக்கும் புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில், அது இணையத்தில் வைரலாகி வருகிறது.