அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித் குமார் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு பரிசோதனைகள் நடைபெற்றது. விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்களால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் உண்டான காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியானது.