நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸ் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. குறுக்கே வந்த கார் மீது மோதி 3 முறை பல்டி அடித்த நிலையில், அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினார். ஸ்பெயினின் வலென்சியா நகரில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டார். அப்போது முந்தி செல்ல முயன்றபோது குறுக்கே வந்த மற்றொரு கார் மீது மோதி, விபத்தில் சிக்கினார்.