கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய் காலமானார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர், அபிநய். அதனைத் தொடர்ந்து ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் போக, வருமானத்துக்கு கஷ்டப்பட்ட அபிநய், சமீப காலமாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அதிகாலை 4 மணியளவில் அபிநய் காலமானார். 44 வயதில் உயிரிழந்த அபிநய்-க்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.