சத்தீஷ்கரில் தண்டிவாடா மாவட்டத்தை சேர்ந்த 15 நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரணடைந்துள்ளனர். மத்திய - மாநில பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையால் பல நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர். நக்சலைட்டுகள் திருந்தி வாழ அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் அவர்கள் ஆயுதங்களை கைவிடுவதாக கூறப்படுகிறது.