ஆந்திராவில் இளம்பெண்ணை காதலன், கத்தியால் குத்தி முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் படித்த போது இருவரும் காதலித்ததாக கூறப்படும் நிலையில், படிப்பு முடிந்து சொந்த ஊர் சென்றதும், அப்பெண் பேசுவதை நிறுத்தியதாக தெரிகிறது. மேலும் வரும் 22ம் தேதி மற்றொருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதால், காதலன் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.