தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கோவிலுக்குள் நுழைந்து ஹேப்பி ஹோலி என்று வாழ்த்து கூறிவிட்டு கணக்காளர் மீது ஆசிட் வீசிச் சென்ற மர்மநபரை, சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். ஹைதராபாத்தின் சைதாபாத் பகுதியில் உள்ள பூலட்சுமி மாதா கோவிலுக்கு வந்த மர்மநபர், அங்கு கணக்காளராக பணிபுரியும் நரசிங்கராவ் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திவிட்டு, ஹேப்பி ஹோலி என்று கூச்சலிட்டபடி தப்பிச் சென்றான்.