"கேள்வியின் நாயகனே - இந்த கேள்விக்கு பதிலேதய்யா?"இந்த பாடல் வரிகளால், ஒரு கதையின் மையக்கருவை, இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது. இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் தான் இது. அப்பா - மகன், அம்மா - மகள் என்று நால்வருக்குள் வரும் ஈர்ப்பு. மகளுக்கு அந்த அப்பா மீதும், மகனுக்கு அந்த அம்மா மீதும் வரும் ஈர்ப்பு. இடியாப்ப சிக்கல் கொண்ட இந்த ஆபூர்வ ராகங்கள்... அந்தக்காலத்து அதிர்வு. ஆனால், அமெரிக்காவில் இதைவிட பல மடங்கு அதிர வைத்துள்ளனர். சுமார் 44 வயதான, விவாகரத்தான Dani Swings என்கிறவரும், அவரது 22 வயதான மகள் Jade- ங்கிறவரும் ஒரே சமயத்தில் தாய்மை அடைந்தனர். தாயும் மகளும், கர்ப்பமானதில் என்ன இருக்கிறது? ஆனால், இதைக் கேட்ட மருத்துவர்களுக்கு ’ஷாக்.’காரணம் தாய் - மகள் 2 பேரின் கர்ப்பத்துக்கு காரணம் ஒரு நபர் தான். இது தான் சர்வதேச வைரல். சுமார் 44 வயதை கடந்த தாயார் டேனி ஸ்விங், விவாகரத்தான நிலையில் ஒரு இளைஞர் மேல் காதல். இவரும் இளைஞரும் ஒரே வீட்டில் இருந்த நிலையில், மகள் வந்துள்ளார். இளைஞரை பார்த்து, மகளுக்கும் ஈர்ப்பு ஏற்பட இருவரும் நெருங்கிப் பழக... தற்போது அம்மாவும் மகளும் கர்ப்பம். காரணம், அந்த இளைஞர் Nicholas. "இதற்கு முன் நாங்கள் 3 பேர் இருந்தோம், இனி ஐந்து பேராக ஆகப்போறோம்" என்று கூறியுள்ளார். தாயார் டேனி ஸ்விங், "நாங்கள் ஒரே வீட்டில் இருக்கிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சி" என்கிறார். . மகள் Jade என்ன சொல்கிறார்? “நானும் என் அம்மாவும் ஒரே ஆணால் கர்ப்பமாக இருக்கிறோம், எங்கள் குழந்தைகள் ஒரு வார இடைவெளியில் பிறக்கும். எனக்கு இப்போது 34 வாரங்கள் ஆகின்றன" என்கிறார் எதார்த்தமாக. ஆனால், இவர்களின் உறவுமுறையை நினைத்து கூட பார்க்கமுடியவில்லை.... "கேள்வியின் நாயகனே - இந்தக்கேள்விக்கு பதிலேதய்யா?இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தைஎல்லோரும் நடிக்கின்றோம் - நாம்எல்லோரும் பார்க்கின்றோம்..."- கவிஞர் கண்ணதாசன்