அமெரிக்காவின் பிரபல ABC செய்தி நிறுவனம், அந்நாட்டின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனல்ட் டிரம்ப் மீதான பாலியல் அவதூறு வழக்கில், 15 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. எழுத்தாளர் ஜீன் கரோல் பாலியல் பலாத்கார வழக்கில் டிரம்ப்புக்கு தொடர்பு உள்ளதாக கடந்த மார்ச் மாதம் ABC செய்தி நிறுவனத்தின் தொகுப்பாளர் பகிரங்கமாக கூறினார். தற்போது இந்த கருத்து தவறு என ஒப்புக்கொண்ட ABC செய்தி நிறுவனம், இந்த வழக்கைத் தீர்ப்பதற்காக, டிரம்புக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதாகவும், அவரது வழக்கறிஞரின் சட்டச் செலவுகளுக்கும், ஒரு மில்லியன் டாலர் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.