ஆவின் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆவின் பச்சை நிற பாலின் உறை வண்ணத்தை மாற்றி பிளஸ் என்ற வார்த்தையை கூடுதலாக சேர்ப்பதற்காக 11 ரூபாய் அதிகம் வசூலிப்பது பகல் கொள்ளை என கண்டனம் தெரிவித்துள்ள அவர், அரசுத்துறை நிறுவனமான ஆவின் அதிக லாபம் ஈட்டுவதற்காக அநீதியான வழிமுறைகளை பின்பற்றக் கூடாது என்றும் ஒரு லிட்டர் 44 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும் ஆவின் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தாமல், இப்போது வினியோகிக்கப்படுவதைப் போன்றே தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.