ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சி ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி ஆதரவு கடிதம் அளித்துள்ளது. நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் டோடா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக் பாஜக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். ஏற்கனவே சுயேச்சை எம்எல்ஏக்கள் 4 பேர் அளித்த ஆதரவுடன் தேசிய மாநாடு, ஆட்சி அமைக்க தேவையான 46 எம்எல்ஏக்களை பெற்றுள்ளது. ஒமர் அப்துல்லா தேசிய மாநாடு கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் அங்கு ஆட்சி அமைக்கிறார். இந்த 47 பேர் தவிர காங்கிரசின் 6 எம்எல்ஏக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ஒருவரின் ஆதரவும் தேசிய மாநாட்டுக்கு உள்ளது.