டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக அமைச்சர் கபில் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தி, சட்டமன்ற வளாகத்தில் பேரணியாக சென்று முழக்கமிட்டனர்.