ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் ஆதார் எண்ணை இணைத்தோர் மட்டுமே இன்று முதல் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே அறிவித்துள்ளது. ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் கவுன்டர்கள் மூலம் மட்டுமே தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். இதேபோல், இன்று முதல் புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இதையும் படியுங்கள் : நாடு முழுவதும் இன்று முதல் ரயில் கட்டண உயர்வு... ஏசி பெட்டிக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்வு