கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி குடும்பத்தை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்ய இருந்த இளைஞர், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.அம்பவயலை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கும், சூரல்மலையை சேர்ந்த ஸ்ருதி என்பவருக்கும் இடையே ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சியிக்கப்பட்டது.இந்தநிலையில், நிலச்சரிவில் சிக்கி குடும்பத்தினர் அனைவரும் இறந்த நிலையில் ஸ்ருதி மட்டும் உயிர் தப்பினார்.இதனை தொடர்ந்து, ஸ்ருதிக்கு, ஜான்சன் ஆறுதலாக இருந்து வந்தநிலையில், இருவரும் டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்வதாக இருந்தனர்.இந்தநிலையில், ஜான்ஷன் குடும்பத்துடன் வேனில் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பியபோது, வெள்ளரம்குன்று என்ற இடத்தில், வேனும் , எதிரே வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்து ஜான்சன் உயிரிழந்தார்.