கர்நாடகா மாநிலம் உடுப்பியில், பஞ்சர் போடும் கடையில் டயர் வெடித்ததில் இளைஞர் ஒருவர், காற்றில் தூக்கி வீசப்பட்டு அந்தர்பல்டி அடித்து கீழே விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 19 வயது நிரம்பிய அந்த இளைஞன், லாரி டயருக்கு பஞ்சம் போட்ட பின்னர், டயரில் காற்று அடைத்துள்ளார். அப்போது, டயர் திடீரென வெடித்ததில், இளைஞர் காற்றில் தூக்கி வீசப்பட்டு தலைக்குப்புற கீழே விழுந்தார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது.