மகனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்த தாய். மகனின் காதலியின் வீட்டிற்கு சென்று விசாரித்த போலீஸ். போலீசாரின் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த சகோதரர்கள். இருவரையும் அடித்தே கொன்று சடலத்தை குழிதோண்டி புதைத்ததாக பகீர் வாக்குமூலம். இருவரும் கொலை செய்யப்பட்டதற்கு என்ன காரணம்? நடந்தது என்ன?காஜல் சைனியை காதலித்து வந்த முகமது அர்மான்உத்தரப்பிரதேசத்துல உள்ள மீரட் மொராதாபாத் பகுதியை சேந்தவரு முகமது அர்மான். இவரும் அதே பகுதியை சேர்ந்த காஜல் சைனி-ங்குற இளம்பெண்ணும் உயிருக்கு உயிரா காதலிச்சுட்டு இருந்துருக்காங்க. ரெண்டு பேரும் வீட்டுக்கு தெரியாம பல இடங்கள்ல ஊர் சுத்திட்டு இருந்துருக்காங்க. கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி நைட்டு நேரத்துல முகமது அர்மான் கூட காஜல் சைனி ரொம்ப நேரமா ஃபோன் பேசிட்டு இருந்துருக்காங்க. இதபாத்து சந்தேகமடைந்த பெற்றோர் மகளோட ஃபோன பிடுங்கி பாத்துருக்காங்க. அப்ப தான் மகளோட காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்துருக்கு. அதுக்கப்புறம் காஜல் சைனி கிட்ட முகமது அர்மான் பத்தி விசாரிச்சுருக்காங்க. அவன் என்ன சாதி, என்ன மதம், என்ன படிச்சுருக்கான்னு எல்லாத்தையும் கேட்ருக்காங்க. மகளோட பதில் மூலமா முகமது அர்மான் வேறு மதத்தை சேந்தவருன்னு தெரிஞ்சுக்கிட்ட பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிச்சுருக்காங்க.காதலியை பார்க்க வீட்டிற்கு சென்ற முகமது அர்மான்முகமது அர்மான் கூட பேசுறத இத்தோட நிறுத்திக்கோ, அவன் வேற மதத்தை சேர்ந்தவன், அவன நீ கல்யாணம் பண்ணிக்கிட்டன்னா நம்ம குடும்பத்தோட மானமே போய்ரும், எங்களால வெளியில தலை காட்ட முடியாதுன்னு திட்டிருக்காங்க. அதுக்கு காஜல், முகமது அர்மான் ரொம்ப நல்லவன், என்ன நல்லா பாத்துப்பான், நான் அவன தான் கல்யாணம் பண்ணிப்பேன், எனக்கு அவன கல்யாணம் பண்ணி வைக்கலனா நான் உயிரோடயே இருக்க மாட்டேன்னு மிரட்டிருக்காங்க. இதகேட்டு கடும் கோபமான காஜலோட சகோதரர்களான ரிங்குவும், சதீஷூம் இளம்பெண்ண போட்டு சரமாரியா அடிச்சுருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்ட முகமது அர்மான் காதலிய பாக்க வீட்டுக்கு போய்ருக்காரு. அப்ப வீட்டுக்கு பின்பக்கத்துல நின்னு ரெண்டு பேரும் பேசிட்டு இருந்துருக்காங்க. இதபாத்து கொலை வெறியான ரிங்கு, சதீஷ் மற்றும் மற்றொரு சகோதரர், ரெண்டு பேரையும் கையில கிடைச்ச பொருட்களையும் கொண்டு சரமாரியா அடிச்சுருக்காங்க.ரிங்கு சைனி, சதீஷ் சைனி ஆகிய இருவர் கைதுஅடுத்து மறைச்சு வச்சுருந்த அரிவாள எடுத்து ரெண்டு பேரையும் சரமாரியா வெட்டிக் கொன்னுருக்காங்க. அதுக்கடுத்து குடும்பத்தினர் உதவியோட ரெண்டு பேரோட சடலத்தையும் அங்கருந்து அகற்றிய சகோதரர்கள் சடலத்த பக்கத்துல உள்ள ஆற்றுப் பகுதிக்கு கொண்டு போய்ட்டு அங்கையே குழி தோண்டி புதைச்சுருக்காங்க. விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் ரிங்கு சைனி, சதீஷ் சைனி ஆகிய ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க. தலைமறைவா இருக்குற மற்றொரு நபரை போலீசார் வலைவீசி தேடிட்டு இருக்காங்க. Related Link போதையில் தூங்கிய கூலித்தொழிலாளி