தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. கொட்டும் மழையிலும் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் புதுக்கோட்டையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின. புத்தாண்டை வரவேற்கும் விதமாக, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் இளைஞர்கள், இளம் பெண்கள் கலந்து கொண்டு திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டை வரவேற்ற சுற்றுலா பயணிகள்கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவி பகுதிகளில் உள்ள விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் அருவி வெள்ளத்தை போல கரை புரண்டு காணப்பட்டது. பல வித உணவு பதார்த்தங்களோடு ஆடல் பாடல் என புத்தாண்டை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள், உற்சாகமாக கொண்டாடினர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆட்டம், பாட்டம் சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. கொட்டும் மழையை பொருட்படுத்தமால் DJ இசைக்கு ஏற்ப குழந்தைகள்,பெண்கள், இளைஞர்கள் நடனமாடி உற்சாகத்தில் திளைத்தனர். உதகையில் கேம்பயர் போட்டு புத்தாண்டு கொண்டாட்டம் நீலகிரி மாவட்டம், உதகையில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் இளைஞர்கள், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அங்காங்கே கேம்பயர் போட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதேபோல், குன்னூர் பகுதியில் உள்ள தனியார் பார்களில் மது அருந்தி இளைஞர்கள் நண்பர்களுடன், நடனமாடி புத்தாண்டை கொண்டாடினர் காரைக்கால் கடற்கரையில் கலை நிகழ்ச்சிகள் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் காரைக்கால் கடற்கரை பகுதியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். டிஜே பாடலின் இசைக்கு ஏற்ப செல்போனில் லைட்டை ஒளிர விட்டு, ஆடி பாடி கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர்.