வயல்வெளியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த விவசாயி. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸ். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் நம்பரை வைத்து மனைவியிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸ். அடுத்தடுத்த விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல். விவசாயி கொலை செய்யப்பட்டது ஏன்? நடந்தது என்ன?வயல்வெளியில் சடலமாக கிடந்த சுமேர் சிங்அதிகாலை நேரம். வயல்வெளிக்கு வேலைக்கு வந்துருக்காங்க கிராம மக்கள். அப்ப சுமேர் சிங்-ங்குற நபரின் சடலம் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், தலை சிதைஞ்ச நிலையிலும் கிடந்துருக்கு. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சுட்டு விசாரணையில இறங்குனாங்க. சுமேர் சிங்-கிற்கு யார் கூடயாவது முன்பகை இருக்கா? நிலம் தொடர்பான பிரச்னையால அவர் கொலை செய்யப்பட்டாரான்னு உறவினர்கள் கிட்ட விசாரிச்சுருக்காங்க போலீஸ். ஆனா அதுல எந்த ஒரு துப்பும் கிடைக்கல. அதுக்கப்புறம் அந்த கிராமத்துல உள்ள சிசிடிவி காட்சிகளை எடுத்து ஆய்வு பண்ணிருக்காங்க போலீஸ். அதுல சுமேர் சிங் நைட்டு நேரத்துல தன்னோட நிலத்துக்கு தூங்க போன காட்சி பதிவாகியிருந்துருக்கு. அதே மாதிரி சுமர் சிங் வீட்ல இல்லாத நேரத்துல அவரோட வீட்டுக்கு இரண்டு பேர் வந்து போன காட்சிகளும் பதிவாகியிருந்துருக்கு.தன்பாலின உறவில் இருந்த ரேணுகா - மால்திஇந்த சிசிடிவி காட்சிய பாத்து சந்தேகமடைஞ்ச போலீஸ், ரேணுகா தேவிய ஸ்டேஷனுக்கு கூப்டு போய் விசாரிச்சுருக்காங்க. உங்க கணவர் வீட்டுல இல்லாத நேரத்துல, உங்க வீட்டுக்கு வந்த ரெண்டு பேரு யாரு, அவங்க எதுக்கு அன் டைம்ல உங்க வீட்டுக்கு வந்தாங்கன்னு கேட்ருக்காங்க. அதுக்கு ரேணுகா ரெண்டு பேரும் என்னோட ப்ரண்ட்ஸ்ன்னு சொல்லிருக்காங்க. ஆனா இத நம்பாத போலீசார் ரேணுகா தேவியோட செல்போன எடுத்து ஆய்வு பண்ணிருக்காங்க. அதுல தான் சுமேர் சிங் எதுக்காக கொலை செய்யப்பட்டாருன்னு எல்லா உண்மையும் தெரியவந்துச்சு. சுமேர் சிங் விவசாய வேலை செஞ்சுட்டு இருந்தாரு. மனைவி ரேணுகா தேவி எந்த ஒரு வேலைக்கும் போகாம வீட்ல இருந்துருக்காங்க. ரேணுகா தேவியும் பக்கத்துல கிராமத்த சேந்த மால்தி தேவி-ங்குற பெண்ணும் நீண்ட நாட்களாவே தன்பாலின உறவுல இருந்துருக்காங்க. ஆனா இந்த விஷயம் சுமேர் சிங்கிற்கு தெரியல.கணவனின் அறிவுறுத்தலை கேட்க மறுத்த ரேணுகா தேவிகொஞ்சம் நாட்களுக்கு முன்னாடி, சுமேர் சிங் விவசாய வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு போய்ருக்காரு. அப்ப மனைவி ரேணுகா தேவி, மால்தி தேவியோட தனிமையில இருந்துருக்காங்க. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச கணவன், மனைவிய போட்டு சரமாரியா தாக்கி நீ லெஸிபியனான்னு கேட்ருக்காரு. அதுக்கு ரேணுகா எந்த ஒரு பதிலும் சொல்லாம அமைதியா இருந்துருக்காங்க. அதுக்கப்புறம் ரெண்டு பேரையும் உட்கார வச்சு பேசுன சுமேர் சிங், இனிமே நீங்க ரெண்டு பேரும் பேசக்கூடாது, அதே மாதிரி ரேணுகா தேவிய பாக்க வீட்டுக்கும் வரக்கூடாதுன்னு மால்தி தேவி கிட்ட சொல்லிருக்காரு சுமேர் சிங். அதுக்கு சரின்னு சொன்ன ரெண்டு பேரும் கொஞ்சம் நாட்கள் பேசாம இருந்துருக்காங்க. ஆனா பழய நினைவுகள மறக்க முடியாம இருந்த நபர்கள் மறுபடியும் பேச ஆரம்பிச்சு, சுமேர் சிங்குக்கு தெரியாம அடிக்கடி தனிமையிலை இருக்க ஆரம்பிச்சுருக்காங்க.ரேணுகா தேவி, மால்தி, ஜிதேந்திரா ஆகிய 3 பேர் கைதுஇத தெரிஞ்சு கடும் கோபமான சுமேர் சிங் மனைவி ரேணுகா தேவிய போட்டு கண்மூடித்தனமா அடிச்சுருக்காரு. இதனால கடும் கோபமான ரேணுகா தேவி, மால்தி தேவி கூட சேந்து கணவன கொலை செய்ய திட்டம் போட்ருக்காங்க. அதுக்காக கூலிப்படை தலைவனான ஜிதேந்திர குப்தாவுக்கு 60 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்குறதா பேச்சுவார்த்தை நடத்துன ரேணுகா தேவி முதற் கட்டமாக 8 ஆயிரம் ரூபாய் பணத்த கொடுத்துருக்காங்க. சம்பவத்தன்னைக்கு சுமேர் சிங் தன்னோட விவசாய நிலத்துக்கு உறங்க போய்ருக்காரு. இந்த விஷயத்த ஜிதேந்திர குப்தாவுக்கு ஃபோன் பண்ணி சொல்லிருக்காங்க ரேணுகா தேவி. இதகேட்டு தனது கூட்டாளிகளோட அந்த விவசாய நிலத்துக்கு போன ஜிதேந்திர குப்தா கும்பல் சுமேர் சிங்க போட்டு சரமாரியா தாக்கிருக்காங்க. அடுத்து மறைச்சு வச்சுருந்த கத்திய எடுத்து அவரோட கழுத்த கொடூரமா அறுத்துருக்காங்க. அதுக்கடுத்து சுத்தியல எடுத்து சுமேர் சிங்கோட தலையில பலமுறை அடிச்சு துடிக்க துடிக்க கொன்னுட்டு தப்பிச்சு போய்ட்டாங்க. ஆனா சிசிடிவி காட்சிகள் மூலமாகவும், செல்போன் மூலமாகவும் உண்மையை கண்டுபிடிச்ச போலீஸ் ரேணுகா தேவி, மால்தி தேவி, ஜிதேந்திர குப்தா ஆகிய 3 பேர அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க. இதையும் பாருங்கள் - "பட்டியலினத்தவர்கள் என்றால் இளக்காரமா?"