தமிழகம் முழுவதும் 2026ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. இசை கச்சேரி மற்றும் DJ நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாக வெள்ளத்தில் மிதந்த மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.புதுச்சேரி... ஆயிரக்கணக்கான மக்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துக்கு மத்தியில் ஆங்கிலப் புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திரைப்பட பின்னணிப் பாடகர்களின் இசைக் கச்சேரி மற்றும் DJ நடன நிகழ்ச்சிக்கு மத்தியில் சிறியோர் முதல் பெரியோர் வரை உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.கண்ணைக் கவரும் நிகழ்த்தப்பட்ட டிரோன் ஷோ-வையும் மக்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.கோவையில்... புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் சினிமா பாடலுக்கு ஏற்றார்போல் வைப் செய்து புத்தாண்டை வரவேற்றனர். கொண்டாட்டம் காரணமாக விழா அரங்கமே திருவிழா போல் இருந்தது.நாமக்கல்லில்... திறந்த வெளி மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆங்கில புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்றனர். இசைக் கச்சேரி, DJ நடனம் என விண்ணை பிளக்கும் அளவுக்கு மக்கள் வைப் மோட்-ல் ஈடுபட்டனர். தொடர்ந்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும் மக்கள் ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும் தங்களுக்கு பிடித்த நடனமாடி மகிழ்ந்தனர். புத்தாண்டு கொண்டாட்டதில் திரைப்பட துணை நடிகர்களும், பின்னணி பாடகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திரைப்பட பின்னணி பாடகர்களான செந்தில் - ராஜலட்சுமியின் இசைக் கச்சேரியில் ஏராளமானோர் கலந்து கொண்டு புத்தாண்டை வரவேற்றனர்.சேலத்திலும் சிறியோர் முதல் இளைஞர்கள், இளம்பெண்கள் வரை புத்தாண்டு கொண்டாட்டத்தில் DJ நடனமாடி FULL VIBE MODI-ல் இருந்தனர். சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற கொண்டாட்டத்தால் அரங்கமே விழாக்கோலம் பூண்டது. மதுரையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் பாரம்பரிய உடையில் பெண் ஒருவர் தலையில் கரகம் வைத்துக் கொண்டு சாகசம் நிகழ்த்தி புத்தாண்டை வரவேற்றார். வண்ண வண்ண உடையணிந்து இளைஞர்களும், இளம் பெண்களும் மேடையில் நிகழ்த்திய நடன நிகழ்ச்சியை நூற்றுக் கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.திருச்சியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்றனர். வண்ண வண்ண உடையணிந்து கொண்டாட்டதில் பங்கேற்ற மக்கள் சினிமா பாடலுடன் விதவிதமாக நடனமாடி உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.திருவள்ளூர் அடுத்த குத்தம்பாக்கத்தில் இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வாண வேடிக்கைகள் மற்றும் DJ ஆட்டம், பாட்டம் என மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் மக்கள் ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள சிஎஸ்ஐ பேராலயத்தின் எதிரே கூடியிருந்த ஏராளமானோர் பலூன்களை பறக்கவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். துன்பம் நீங்கி மக்கள் மகிழ்ச்சியுடனும் வாழ ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.