அமெரிக்காவில் கைவிடப்பட்ட 22 மாடி கட்டிடம் வெடி வைத்து தரை மட்டமாக்கப்பட்டதன் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. லூசியானா மாகாணத்தின் லேக் சார்லஸ் பகுதியில் இருந்த கட்டடம் வெறும் 15 விநாடிகளில் இடிந்து விழுந்து தரை மட்டமானது. இதனால், அப்பகுதி முழுவதும் தூசு மண்டலமாக மாறியது. இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகள் 5 மாடி உயரத்திற்கு குவிந்து கிடந்தது.