கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி மோதி சாலையோரம் நடந்து சென்ற 4 பள்ளி மாணவிகள் உயிரிழந்தனர். பாலக்காடு மாவட்டம் கல்லடி கோடு பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவிகள் 5 பேர், சாலையோரமாக நடந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மாணவிகள் மீது மோதியது.