ஆந்திரா மாநிலம் விஜயவாடா அருகே சாலையில் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிரானைட் கற்களை ஏற்றி கொண்டு மச்சிலிப்பட்டினம் துறைமுகம் நோக்கி டாரஸ் லாரி சென்று கொண்டிருந்த போது, சிதாரா குடாலி என்ற இடத்தில் லாரியின் முன்பக்கம் புகைய ஆரம்பித்து திடீரென தீப்பற்றியது. இதனை அறிந்த ஓட்டுநர் லாரியை சாலையில் நிறுத்திவிட்டு இறங்கி தப்பித்த நிலையில், லாரியில் கொழுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.