தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் தேய்பிறை பிரதோஷத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மாசி மாத தேய்பிறையை முன்னிட்டு, சன்னிதானத்தில் உள்ள நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர் மற்றும் சந்தனம் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது.