பிரேசிலில் 10 பேருடன் வானில் பறந்த சிறிய ரக விமானம், கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டு சென்ற விமானம், கிராமடோ நகர் அருகே பறந்துகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரக்கடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்த நிலையில், கடையில் இருந்த 2 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.