பிரேசிலின் சாவ் பாலோ நகரில் சிறிய ரக விமானம் சாலையில் விழுந்து தீப்பிடித்து எரிந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் பேருந்தின் மீது சிறிய ரக விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இவ்விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்தனர். விமானத்தின் உட்பகுதியில் கருகிய நிலையில் இரு உடல்களையும் அதிகாரிகள் மீட்டனர்.