அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். கிழக்கு போகா ரேடன் விமான நிலையத்திற்கு அருகே இந்த விமான விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விமானம் விழுந்த இடத்தில் அதிக அளவு புகை மூட்டம் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளது.