ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றிட வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வழக்கு தொடர இருப்பதாக தகவல் வெளியானது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென் பொறியாளர் கவின் ஜூலை 27 ஆம் தேதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், விரைந்து சிறப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது