சென்னையில், இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது.ஒரு கிராமுக்கு 215 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில், ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 340 ரூபாய்க்கும், ஒரு கிலோ 3 லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. அதிர்ச்சி தந்த நேற்றைய நிலவரம்நேற்று ஜனவரி 21ஆம் தேதி, காலை தங்கம் விலை கிராமுக்கு 350 ரூபாய் அதிகரித்து, 14,250 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 2,800 ரூபாய் உயர்ந்து, 1.14 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று பிற்பகலில், மீண்டும் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 165 ரூபாய் உயர்ந்து, 14,415 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சவரனுக்கு 1,320 ரூபாய் அதிகரித்து, 1,15,320 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 345 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்து, 3.45 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.ஆறுதல் தந்த இன்றைய காலை நிலவரம்இந்நிலையில், இன்று ஜனவரி 22ஆம் தேதி காலையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 215 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 14,200 ரூபாயாக இருந்தது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 345 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதையும் பாருங்கள் - பியூஸ் கோயல் கூறிய தகவல்