சென்னையில், கடந்த மூன்று நாட்களாக குறைந்து வந்ததற்கு ஈடாக, ஒரே நாளில் 2,160 ரூபாய்க்கு, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 16,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. Related Link இன்றைய ராசி பலன்கள் 19022026 இந்த மாத விலை நிலவரம்கடந்த 1ஆம் தேதி ஒரு கிராம் ரூ.14,900, ஒரு சவரன் ரூ.1,19,200 ஆக விற்பனை ஆனது. அதன் பின்னர், தங்கத்தின் விலையில், ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்தது.கடந்த 10ஆம் தேதி, ஒரு கிராம் ரூ.14,580, ஒரு சவரன் ரூ.1,16,640 ஆக இருந்தது. 11ஆம் தேதி சற்று விலை அதிகரித்து, ஒரு கிராமுக்கு ரூ.210ம், ஒரு சவரனுக்கு ரூ.1,680ம் உயர்ந்தது. இதையடுத்து தங்கத்தின் விலையில் சிறிய அளவு மாற்றம் காணப்பட்டு விற்பனை ஆனது. கடந்த 14ஆம் தேதி ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.14,560 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்து, ரூ.1,16,480க்கும் விற்பனை ஆனது. பிப்.17ஆம் தேதி விலை சரிவுஇந்த நிலையில், தங்கத்தின் விலை சற்று குறைந்தது. ஒரு கிராமுக்கு ரூ.120ம், ஒரு சவரனுக்கு ரூ.960ம் குறைந்தது. ஒரு கிராம் ரூ.14,320க்கும், ஒரு சவரன் ரூ.1,14,5600க்கும் விற்பனை ஆனது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை ஆனது. பிப்.18ஆம் தேதி சென்னையில், 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சரிந்தது. ஒரு சவரனுக்கு ரூ.720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,840க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,230க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனையாகி ஆனது. பிப்.19 தங்கம் விலை ரூ.2160 உயர்வு3 நாட்களாக விலை குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. சென்னையில், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.2,160 உயர்ந்து ரூ.1,16,000க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.270 உயர்ந்து ரூ.14,500க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து, வெள்ளியின் விலையும் உயர்ந்தது. வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.10,000 உயர்ந்து ரூ.2,70,000க்கு விற்பனை ஆனது. விலையில் ஏற்ற, இறக்கம் சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்தவாறு இருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உச்சம் தொட்டு வருகிறது.கடந்த நாட்களில் ஒரு சவரன் தங்கம் (Gold) விலை:13.01.2026 - ரூ.1,15,20014.01.2026 - ரூ.1,16,48015.01.2026 - ரூ 1,16,48016.01.2026 - ரூ 1,15,52017.01.2026 - ரூ.1,14,56018.01.2026 - ரூ.1,13,840 19.01.2026 - ரூ.1,16,000