கட்டிலில் தலை சிதைந்து, ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி. எவ்வித பதற்றமும் இல்லாம எதிரிலேயே அமர்ந்திருந்த சைகோ. மனைவியை துடிதுடிக்க கொன்று, அதனை ஃபோட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் வைத்த கொடூரம். கணவனே மனைவிக்கு எமனாக மாறியது ஏன்? கொலைக்கான பின்னணி என்ன?சர்வ சாதாரணமாக நாற்காலியில் அமர்ந்திருந்த கணவன்காவல் உதவி எண் நூறுக்கு ஒருத்தரு போன் பண்ணிருக்காரு. சார், என் மனைவிய நான் கொலை பண்ணிட்டேன் வந்து என்னைய கைது பண்ணிக்கோங்க, சரண்டர் ஆக நேர்ல வர முடியாதுன்னு சொல்லிருக்காரு. யாரு பேசுறீங்க? எந்த ஏரியால இருந்து பேசுறீங்க? எங்க வரணும், அப்டின்னு போலீசார் கேட்டதும் ஹைதராபாத்ல உள்ள போரபண்டா பகுதிக்கு வர சொல்லிருக்காரு அந்த நபர். அங்க நபரோட வீட்டுக்குள்ள போயி போலீஸ் பாக்குறப்ப சரஸ்வதி அப்படிங்குற பொண்ணு தலை சிதைஞ்ச நிலையில, ரத்தவெள்ளத்துல சடலமா கெடந்துருக்காங்க. அதுக்கு எதிர்க்க சேர் போட்டு எந்த சலனமும் இல்லாம உக்காந்துட்டு இருந்தாரு, சரஸ்வதியோட கணவர் ஆஞ்சனேயுலு.மனைவியிடம் தினமும் சண்டை போட்ட ஆஞ்சனேயுலுஏன்யா, உன் மனைவிய கொலை பண்ண? என்ன காரணம்னு கேட்ருக்காங்க போலீஸ். அப்ப ஒண்ணு இல்ல. ரெண்டு இல்ல. கொலை செஞ்சத்துக்கு காரணத்த நெறைய அடுக்கிருக்காரு. சரஸ்வதிக்கும், ஆஞ்சனேயுலுக்கும் கல்யாணமாகி 14 வருஷம் ஆகுது. 6 வயசுல ஒரு மகளும் இருக்காங்க. வெளியூர்ல வேலை பாத்துட்டு இருந்த ஆஞ்சனேயுலு, சில மாசங்களுக்கு முன்னால அங்க இருந்து சொல்லாம கொள்ளாம, சொந்த ஊருக்கு ஓடி வந்துருக்காரு. அதுக்கப்புறம் எந்த வேலையும் பாக்காம வீட்ல இருந்த ஆஞ்சனேயுலு சரஸ்வதிக்கிட்ட சண்ட போடுறதுதான் பொழுதுபோக்கு அப்டிங்குறமாதிரி இருந்துருக்காரு. நின்னா குத்தம், நடந்தா குத்தம், சொந்தக்காரங்கிட்ட பேசுனா குத்தம்னு வம்பு இழுத்துக்கிட்டே இருந்த ஆஞ்சனேயுலு சளைக்காம சந்தேக சண்டையும் போட்ருக்காரு.வீட்டு வேலை செய்து பிழைப்பை நடத்தி வந்த சரஸ்வதிநாலு வீட்டுக்கு வேலைக்குப்போன சரஸ்வதி சம்பளம் வாங்கி கணவன் கண்ணுல காட்டவே இல்ல. ஓ, வேலைக்குப்போற திமிருல ஆடுறயான்னு வாக்குவாதம் பண்ண ஆஞ்சனேயுலுகிட்ட, நீங்களும் வேலைக்கு போக மாட்டிங்க. சிறுக சிறுக சேத்துவச்ச காசையும் கேட்டு வம்பிழுக்குறதே வேலையான்னு பேசிருக்காங்க. அப்படி சொன்னது ஆஞ்சனேயுலுவுக்கு உச்சகட்ட கோபத்த ஏற்படுத்திருக்கு. வீட்டுக்கு வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு நீ எங்க போறன்னு மனைவிய சீண்டவும், இப்படியே ரெண்டுபேருமே மாறி மாறி சண்டை போட்ருக்காங்க. சரஸ்வதியும், ஆஞ்சனேயுலும் சண்டை போடாம இருந்தாதான் ஆச்சரியமே. பணம் கொடுக்க முடியாது எனக் கூறியதால் ஏற்பட்ட தகராறுசம்பவத்தனைக்கு, காலையில சரஸ்வதிகிட்ட பணம் கேட்டுருக்காரு ஆஞ்சனேயுலு. அதுக்கு என்கிட்ட பணமெல்லாம் இல்ல, வேணும்னா வேலைக்கு போங்கன்னு எதார்த்தமா சொல்லிருக்காங்க மனைவி சரஸ்வதி. அப்போ, வேலைக்கு போற திமிருல பேசுறியான்னு அவங்ககிட்ட மல்லுக்குநின்ன ஆஞ்சனேயுலு ஒழுங்கா இருந்துக்கோ இல்ல, கதைய முடிச்சிருவேன்னு மிரட்டிருக்காரு. இதுக்கு பயப்படுற ஆளு நான் இல்லன்னு சொல்லிருக்காங்க சரஸ்வதி. விடிஞ்சதும் இந்த போர் நடந்து முடிஞ்சி, வழக்கம்போல வீட்டு வேலைக்கு போயிட்டாங்க சரஸ்வதி. சைக்கோ என கணவன் ஆஞ்சனேயலுவை திட்டிய சரஸ்வதிமதியம் ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்த சரஸ்வதிகிட்ட யார பாக்க போன அதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்டன்னு சீண்டிருக்காரு ஆஞ்சனேயுலு. சைகோமாதிரி பேசாத, உன் புத்தியே இதுதான்னு சரஸ்வதி பதிலுக்கு பதில் சண்டைபோட வாக்குவாதம் வலுத்துருக்குது. அப்போ வீட்டுல இருந்த குழவி கல்ல எடுத்துட்டு வந்து படுத்துருந்த சரஸ்வதியோட தலையிலேயே போட்டுருக்கான் ஆஞ்சனேயுலு. அதுல நிக்காம ரத்தம் எல்லாம் வெளியேறி சரஸ்வதி உயிரிழந்துட்டாங்க. அடுத்து, மனைவி சடலத்த ஃபோட்டோ எடுத்து வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸும் வச்சிருக்கான். சைக்கோ கணவனை கைது செய்த காவல்துறையினர்மனைவியோட சடலம் கட்டில்லயே கிடக்க, அதுக்கு எதிர்ல சேர போட்டு சைலண்ட்டா உக்காந்த ஆஞ்சனேயுலு போலீஸுக்கு கால் பண்ணி தகவல் சொல்லிருக்கான். ஒடனே அங்க வந்த போலீசார்கிட்ட எந்த பதட்டமும் இல்லாம பதில் சொல்லிருக்காரு ஆஞ்சனேயுலு. மது குடிக்கிறதோ, சிகரெட் புடிக்கிறதோன்னு எந்த கெட்ட பழக்கமுமே ஆஞ்சனேயுலுக்கு கிடையாது, ஆனா சைகோ மாதரி காரணமே இல்லாம சண்ட போட்டுட்டே இருப்பாருன்னு சொன்ன அக்கம்பக்கத்துல உள்ளவங்க, கடைசியில அந்த பொண்ணையும் கொன்னுட்டான்னு சொல்லிருக்காங்க. தன்னோட மகள் எதிர்காலத்துக்காக தான் 14 வருஷமா ஆஞ்சனேயுலு டார்ச்சர சரஸ்வதி பொறுத்துக்கிட்டதாகவும் கூறி சொந்தபந்தங்க அழுதுருக்காங்க. இதையும் பாருங்கள் - 17 நாட்கள் குமரியில் மகள், தந்தை செய்த சம்பவம்