தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை தெற்கு அந்தமான் கடலில் மேல் காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், வரும் 23-ம் தேதிக்கு மேல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 25-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.