கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபர் சபரிமலையில் 70 அடி உயரத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2 தினங்களாக சபரிமலையில் சுற்றித் திரிந்த அவர், சன்னிதானம் அருகே உள்ள மாளிகைபுரத்தில் உள்ள நடைபாதையில் இருந்து குதித்ததில் கை கால்களில் பலத்த காயமடைந்து, சன்னிதானம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.