மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தெற்கு மியான்மர் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், விரைவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நவ.3 முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு:தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையை பொறுத்தவரை நாளை மறுநாள் முதல் ஆறாம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.இதையும் பாருங்கள் - வங்கக்கடலில் உருவாகும் மாற்றம் - பருவ மழையின் அடுத்த ட்விஸ்ட் | RainNews | WeatherUpdate