ஆந்திராவில் மினி லாரி வயல்வெளியில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏலூரு மாவட்டத்திலிருந்து கிழக்கு கோதாவரிக்கு முந்திரிப் பருப்பு தோல் ஏற்றிக்கொண்டு சென்ற மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி, அருகில் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்தது. இதில் லாரியின் பின்னால் அமர்ந்திருந்த கூலி தொழிலாளிகள் 7 பேரும் முந்திரி தோல் மூட்டைகளுக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், தகவலறிந்து வந்த போலீசார், லாரியின் அடியில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.