ஜெர்மனியின் கார்னிவல் கொண்டாட்டங்களுக்கு இடையே சாலையில் ஒருவர் அதிவேகமாக காரை இயக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சாலையை கடக்க முயன்ற பொதுமக்கள் அதிர்ச்சியில் அப்படியே நின்ற நிலையில், வேகமாக சென்ற கார் இரண்டு பேர் மீது மோதியதாகவும், அவர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே கார் ஓட்டுநரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.